செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது

Published On 2016-07-21 21:54 IST   |   Update On 2016-07-21 21:54:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்ட மன்ற தொகுதி தி.முக. செயல் வீரர்கள் கூட்டம் நாளை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் போட்டியிடுவது குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கீழ் கண்டவாறு நடைபெற உள்ளது.

அதன்படிநாளை (22–ந்தேதி) 10மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள செந்தாமணி மண்டபத்தில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு காரைக்குடி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் காரைக்குடி 100 அடிரோட்டில் உள்ள கோல்டன் சிங்கர் மாகலில் நடக்கிறது.

23–ந் தேதி காலை 10மணிக்கு மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மானாமதுரை பேரூராட்சி மகாலிலும், அன்று மாலை 4 மணிககு சிவகங்கை தொகுதிக்குட்பட்ட கூட்டம் சிவகங்கை கலெக்டர் ஆபீஸ் எதிரே உள்ள மண்டபத்தில் நடக்கிறது.

இந்த கூட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News