செய்திகள்

பவானி அருகே கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் பெண் தற்கொலை

Published On 2016-07-18 17:22 IST   |   Update On 2016-07-18 17:22:00 IST
கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

பவானி அருகே உள்ள குப்புச்சிபாளையம் முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் காயத்ரி (28) இருவருக்கும் தோட்டகுடியான் பாளையம் அம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள் என்பவரது மகன் கந்தசாமிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்த நிலையில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையொட்டி காயத்ரி கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அவரது பெற்றோர் மகளை சமாதானம் செய்து வைத்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர். ஆனால் சில நாட்களில் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் மனவேதனை அடைந்த காயத்ரி வீட்டில் இருந்த குருணை மருந்தை (வி‌ஷம்) குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காயத்ரியின் தந்தை கந்தசாமி பவானி போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News