செய்திகள்

திருமயம் அருகே இளையோர் கபடி போட்டி

Published On 2016-07-13 18:14 IST   |   Update On 2016-07-13 18:15:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள போசம்பட்டியில் மாநில அளவிலான இளையோர் ஆண்கள் கபாடி போட்டி நடைபெற்று வருகின்றன.

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள போசம்பட்டியில் மாநில அளவிலான இளையோர் ஆண்கள் கபாடி போட்டி நடைபெற்று வருகின்றன. இந்த கபாடி போட்டியை காண மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இந்தப்போட்டி போசம்பட்டி ஸ்ரீமுனீஸ்வரர் கோவில் திடல் முன்பு நடைபெற்று வருகிறது

இப்போட்டியில் சென்னை,புதுக்கோட்டை திருச்சி, சேலம், சிவகங்கை அரியலூர், தஞ்சாவூர்,நாகப்பட்டிணம்,  கடலூர், ஆகிய மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 168 கபாடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். போட்டியில் கபாடி வீரர்கள் 65 கிலோ உடல் எடை உள்ளவர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளமுடியும். போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும்.போட்டி 15 சுற்றுகளாக நடைபெறும், 15 வது சுற்று போட்டி இறுதிப்போட்டியாகும் .

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல்பரிசு 24,001ம் இரண்டாம்பரிசு 20,001ம் மூன்றாம்பரிசு 15,001ம் நான்காம் பரிசு 10,001ம் தொகை ரொக்கமாகவும் சுழற்கோப்பைகளும் வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Similar News