செய்திகள்

சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 6 அடிநீள முதலை பிடிபட்டது

Published On 2016-07-11 10:22 IST   |   Update On 2016-07-11 10:22:00 IST
சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 6 அடிநீள முதலை பிடிபட்டது. பிடிபட்ட முதலை 150 கிலோ எடை உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் வல்லம்படுகை பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் கிளைவாய்க்கால்கள் வழியாக அருகில் இருக்கும் ஊர்களுக்குள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன.

கிராமத்தில் உள்ள கால்நடைகளை கடித்து குதறுகின்றன. மேலும் மனிதர்களையும் கடிப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள கண்டியாமேடு கிராமத்தில் முத்துக்குமரசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் 6 அடிநீள முதலை கிடந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வனச்சரகர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து, அவர்கள் அங்கு கிடந்த முதலையை போராடி பிடித்தனர். முதலையை வக்ரமாரி நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட முதலை 150 கிலோ எடை உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News