செய்திகள்

அறந்தாங்கியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2016-07-07 10:49 IST   |   Update On 2016-07-07 10:49:00 IST
அறந்தாங்கியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த அழகேசன் மகன் மகேஸ் என்ற மகேஸ்வரன் (வயது 26). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் வழிப்பறியில் ஈடுபட்டபோது அறந்தாங்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிலை திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும், அது தொடர்பாக அவர்மீது வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஸ் ஹதிமனி பரிந்துரையின்பேரில், மகேஸை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஸ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் மகேஸை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News