செய்திகள்

பவானி அருகே வேன் மீது பஸ் மோதல்: 3 பேர் படுகாயம்

Published On 2016-07-06 20:25 IST   |   Update On 2016-07-06 20:25:00 IST
பவானி அருகே வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோடு:

கோபி அருகே உள்ள கொளப்பலூர் தவடம் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மாமா மாரியப்பன் (60), மனைவி மலர் (30), மற்றும் மகள் பிரியதர்சினி (4) ஆகியோருடன் ஒரு வேனில் சென்றார். வேனை செல்லதுரை என்பவர் ஓட்டினார்.

இந்த வேன் பவானி அருகே உள்ள காளிங்க ராயன் பாளையம் லட்சுமி நகரில் சென்ற போது டிரைவர் ஓரமாக வேனை நிறுத்தினார். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக வேனின் பின்னால் மோதியது. இதில் மாரியப்பன், பிரிய தர்சினி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பழனிச்சாமியும், டிரைவர் செல்லதுரையும் காயம் இல்லாமல் உயிர் தப்பினர்.

படுகாயம் அடைந்த 3 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News