செய்திகள்

அறந்தாங்கியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

Published On 2016-07-04 18:01 IST   |   Update On 2016-07-04 18:01:00 IST
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அறந்தாங்கியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறந்தாங்கி:

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அறந்தாங்கியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நிறுவனர்–தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ஷாஜகான் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி தாசில்தார் மணிவண்ணன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், வர்த்தக சங்கத் தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் ரவீந்திரகுமார், அறந்தாங்கி நகர தி.மு.க செயலாளர் ஆனந்த், அறந்தாங்கி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெங்கடேசன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி கிரீன்முகமது, வர்த்தக சங்கம், ரோட்டரி சங்கம், நகரசபை கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News