செய்திகள்

புதுவயல், கல்லல் பகுதியில் நாளை மின்வினியோகம் நிறுத்தம்

Published On 2016-06-26 23:26 IST   |   Update On 2016-06-26 23:26:00 IST
காரைக்குடி அருகே உள்ள புதுவயல், கல்லல் ஆகிய பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே நாளை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள புதுவயல், கல்லல் ஆகிய பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, நாளை (27-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், கோட்டையூர், ஸ்ரீராம்நகர், மணச்சை, மித்ராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்களைக்காடு, வீரசேகரபுரம், கல்லல், வெற்றியூர், பனங்குடி, பாகனேரி, மரிங்கிபட்டி, செவரக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Similar News