செய்திகள்

வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் பலி

Published On 2016-06-22 17:25 IST   |   Update On 2016-06-22 17:25:00 IST
வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் பலியானார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புரம் 3-ம் சேத்தியை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் ராகவன் (22).

இவர் நேற்று இரவு வி‌ஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News