செய்திகள்
வேதாரண்யம் அருகே இளம்பெண் கடத்தல்
வேதாரண்யம் அருகே இளம் பெண்ணை கடத்தியதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம்மேற்கு வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வேம்பையன்(49).
இவரது மகள் துர்கா(22). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி வாய்மேட்டிலுள்ள வங்கிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேம்பையன் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதில் வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பூபாலன், காளிதாஸ் மகன் வீரமுருகன், ராதா மகன் ராஜீவ்காந்தி ஆகிய 3 பேரும் தன் மகளை கடத்தி சென்று விட்டதாக வாய்மேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.