செய்திகள்

சீர்காழி அருகே படகில் விளையாடிய சிறுவன் மாயம்

Published On 2016-06-20 18:57 IST   |   Update On 2016-06-20 18:57:00 IST
சீர்காழி அருகே படகில் விளையாடிய சிறுவன் மாயமானதால் அவன் கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என்பதால் அவனை கடலில் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவர் காலனி தெற்கு தெருவை சேர்தவர் சிவபாலன் மீனவர். இவரதுமகன் சந்தோஷ் (வயது 10). 5–ம் வகுப்பு மாணவர். இவன் நேற்று பூம்புகார் சென்று தனது தந்தை சிவபாலனின் படகில் ஏறி விளையாடி கொண்டு இருந்தான்.

பின்னர் அவன் மாயமாகி விட்டான். அவன் கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என்பதால் அவனை கடலில் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News