செய்திகள்

கண்டரமாணிக்கம், காளையார்கோவில் பகுதியில் நாளை மின்வினியோகம் நிறுத்தம்

Published On 2016-06-19 22:38 IST   |   Update On 2016-06-19 22:38:00 IST
கண்டரமாணிக்கம், காளையார்கோவில் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டரமாணிக்கம், ஆலங்குடி, சொக்கநாதபுரம், நாச்சியாபுரம், இளங்குடி, பட்டமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

இதேபோல், காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, புளியடிதம்மம், கொல்லாவயல் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சாமுவேல் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News