செய்திகள்

வேதாரண்யத்தில் அரசு அலுவலரை மிரட்டியவர் கைது

Published On 2016-06-19 16:59 IST   |   Update On 2016-06-19 16:59:00 IST
வேதாரண்யத்தில் உணவு பாதுகாப்பு அலுவலரை மிரட்டி அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பச்சையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபானி. இவர் வேதாரண்யம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டு முன்வாசலில் வைத்திருந்த பெயர் பலகையை எடுக்குமாறு தேத்தாகுடிதெற்கு பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராமையன்(63) மிரட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமையனை கைது செய்தனர்.

Similar News