செய்திகள்
தேனி மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் விபரம்
தேனி மாவட்டத்தில் 3 மதுக்கடைகள் பொது மக்களுக்கு இடையூறாகவும், தனியார் ஆஸ்பத்திரி பகுதியில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. அதன்படி இந்த 3 மது கடைகளும் மூடப்பட்டன.
தேனி:
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிஏற்ற முதல் நாளில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி டாஸ்மாக் அதிகாரிகள் மதுக்கடைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
மதுரை மண்டலத்தில் தேனி மாவட்டம் அடங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் 3 மதுக்கடைகள் பொது மக்களுக்கு இடையூறாகவும், தனியார் ஆஸ்பத்திரி பகுதியில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. அதன்படி இந்த 3 மது கடைகளும் மூடப்பட்டன.
தேனி அருகே அன்னஞ்சி விலக்கு ஊஞ்சாம்பட்டி (கடை எண் 8621), கடமலைக்குண்டு தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள கடை (கடை எண் 8604), ஆண்டிப்பட்டி தொப்பம்பட்டி ரோடு (கடை எண் 8506).