செய்திகள்

தலைஞாயிறு அருகே வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பலி: போலீசார் விசாரணை

Published On 2016-06-11 10:35 IST   |   Update On 2016-06-11 10:35:00 IST
தலைஞாயிறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பரவையை சேர்ந்த நடராஜன் மகன் அறிவழகன் (வயது 30) ஆட்டோ டிரைவர். இவரும் பெருமகளூரை சேர்ந்த கருப்பையன் மகன் கார்த்திக் (39) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பரவையிலிருந்து பேராவூரணிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர். அவர்கள் நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் தலைஞாயிறு அருகே உள்ள நீர்மூளை என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News