செய்திகள்

சீர்காழி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்

Published On 2016-06-09 16:42 IST   |   Update On 2016-06-09 16:43:00 IST
சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பச்சபெருமாநல்லூர் என்ற இடத்தில் புதுபட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைகாலிலிருந்து அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரில் வந்த நபர் போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த காரை போலீசார் சோதனை செய்த போது அதில் 58 அட்டை பெட்டிகளில் 2784 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.இந்த மதுபாட்டில்களை போலீசார் கைபற்றியதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் மதுபானம் கடத்தி வந்த நபர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News