செய்திகள்

பரங்கிமலையில் ராணுவ வீரரிடம் செல்போன் திருடிய ஊழியர் கைது

Published On 2016-06-01 12:21 IST   |   Update On 2016-06-01 12:21:00 IST
பரங்கிமலையில் ராணுவ வீரரிடம் செல்போன் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் சிப்பாயாக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரிடம் அங்கு முடிதிருத்தும் தற்காலிக ஊழியராக பணியாற்றும் அனில் சோனால் 2 செல்போன், ரூ. 500 திருடினார்.

இது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில் சோனாலை கைது செய்தனர்.

Similar News