செய்திகள்

கூடுவாஞ்சேரியில் கணவன் -மனைவியை தாக்கி நகை கொள்ளை

Published On 2016-06-01 11:52 IST   |   Update On 2016-06-01 11:52:00 IST
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 9 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் கலாவதி. நேற்று இரவு அவர் கணவருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு நடத்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தனர்.

நகை - பணம் கேட்டு தம்பதியை மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கலாவதி அணிந்து இருந்த 9 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News