செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்: சாமி சிலையை கட்டிப்பிடித்து அழுத பெண்ணால் பரபரப்பு

Published On 2016-05-31 14:45 IST   |   Update On 2016-05-31 14:47:00 IST
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியபோது சாமி சிலையை கட்டிப்பிடித்து அழுத பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்:

ஆலந்தூர் சிமெண்ட் ரோடு, ஜி.எஸ்.டி. சாலையில் வசித்து வருபவர் லலிதா. வீட்டின் முன் பகுதியில் சிறிய அம்மன் கோவிலும் கட்டி இருந்தார். இவர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகவும், அதனை அகற்றவும் அதிகாரி கள் உத்தரவிட்டு இருந்தனர்.

இதையடுத்து இன்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரவி, அண்ணாமலை மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் லலிதாவின் குடிசை வீட்டை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை அங்கு பாது காப்பு இருந்த பரங்கிமலை போலீசார் சமாதானம் செய்தனர்.

இதற்கிடையே வீட்டு முன்பு இருந்த கோவிலையும் அதிகாரிகள் அகற்றினர். அப்போது லலிதா, சாமி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இதனை பார்த்து அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் சாமி சிலையை அகற்றாமல் சென்றனர்.

Similar News