செய்திகள்

வேதாரண்யம் அருகே 12 மணிக்கு முன்பு திறந்த மதுக்கடைக்கு சீல்

Published On 2016-05-25 17:36 IST   |   Update On 2016-05-25 17:37:00 IST
வேதாரண்யம் அருகே 12 மணிக்கு முன்பு திறந்த மதுக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:

டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள் மற்றும் கடையுடன் இணைந்த மதுக்கூடங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், அவரிக்காடு பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையுடன் இணைந்த மதுக்கூடம் அரசு உத்தரவை மீறி மதியம் 12 மணிக்கு முன்னதாகவே திறந்து மது விற்பனை செய்யப்படுவதாக வரப்பெற்ற புகாரின் பேரில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி நாகப்பட்டினம் டாஸ்மாக் மாவட்ட மேலாளரால் மேற்படி மதுக்கூடம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுக்கூட உரிமதாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Similar News