செய்திகள்

சிவகங்கை அருகே போலீஸ் தடியடி-துப்பாக்கி சூடு: கல்வீச்சில் டி.எஸ்.பி. உள்பட 10 பேர் படுகாயம்

Published On 2016-05-24 10:01 IST   |   Update On 2016-05-24 10:01:00 IST
சிவகங்கை அருகே கல்வீச்சு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை :

சிவகங்கை அருகே கல்வீச்சு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது கீழத்தெரு. இங்கு நேற்று பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு இரவில் மாணவ–மாணவி களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் மற்றும் ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி களுக்கு போலீசாரிடம் அனுமதி வாங்கவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி மற்றும் போலீசார் கீழத்தெரு சென்று அனுமதி பெறாமல் விழா நடத்த வேண்டாம் என கூறி வந்தனர். ஆனால் இதனை மீறி இரவில் விழா நடத்தப்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டி மற்றும் போலீசார் அங்கு சென்று விழா கமிட்டியினரை கண்டித்தார்களாம்.

அப்போது தங்களது சாதியை குறைவாக சொல்லி சப்–இன்ஸ்பெக்டர் திட்டிய தாக அந்த சமுதாய மக் கள் குற்றம் சாட்டினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் 10 பேர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் கீழத்தெரு மற்றும் அருகில் வசிக்கும் முத்தரையர் சமுதாய மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இரவு 10 மணி அளவில் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து போலீசார் மதகுபட்டி காவல் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ் நிலை காணப்பட்டது. இருப் பினும் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை விட போலீசார் மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இரவு 11 மணிக்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பரமக்குடி–சென்னை அரசு பஸ்சையும் அவர்கள் மறித்தனர். அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பஸ்சின் கண்ணாடி களை கல்வீசி உடைத்தனர்.

இதனால் காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட மக் களை கலைந்துபோக வலி யுறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கல் மற்றும் உருட்டுக் கட்டைகளை போலீசார் மீது வீசினர். இதனால் போலீசார் கூட்டத்தினரை கலைக்க தடியடி நடத்தினர்.

இருப்பினும் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அப்போதும் மறியலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கற்களை வீசினர். இதில் போலீஸ் துணை சூப்பி ரண்டு பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள், இளையராஜா, செழியன், ஏட்டுகள் வீரபாண்டி, ஜெய ராஜ், போலீஸ்காரர்கள் அய்யப்பன், கருப்பையா, விஜய் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பிறகே கூட்டம் கலைந்து ஓடியது.

இந்த கல்வீச்சு மற்றும் தடியடி சம்பவங்கள் காரண மாக அந்த பகுதி போர்க் களம்போல் காணப்பட்டது. சாலை முழுவதும் கற்களும், கட்டைகளும் கிடந்தன.

மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. கல்வீச்சில் காயம் அடைந்த போலீ சார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர் பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண் டார். அப்போது இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார். இதனால் அங்கு சகஜநிலை திரும்பியது. இருப்பினும் அந்த பகுதி யில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சாரும் குவிக்கப்பட்டு பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News