செய்திகள்
தேவகோட்டையில் காய்கறி வாங்க சென்ற பெண்ணிடம் 8 பவுன் பறிப்பு
மார்க்கெட் சென்ற பெண்ணிடம் முகமூடி மனிதர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை செப்ப வேளாலர்தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து இரவது மனைவி மலர்கொடி(35). தற்பொழுது மாரிமுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வாரச்சந்தைக்கு மலர்கொடி காய்கறி வாங்க சென்றார். சந்தைக்கு சென்று திரும்பி வீட்டின் அருகில் வரும்பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் சுமார் 25–30 வயது மதிப்புள்ள இருநபர்கள் முகத்தை மறைத்து கர்சிப் கட்டிக் கொண்டு வந்தனர்.
மலர்கொடி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். ஆனால் மலர்கொடி செயினை கையில் பிடித்து கொண்டு கூச்சல் போட்டார். இருப்பினும் அந்த மர்ம நபர்கள் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்கள்.
இச்சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.