செய்திகள்

வேதாரண்யம் அருகே தீக்குளித்து வாலிபர் சாவு

Published On 2016-05-23 15:45 IST   |   Update On 2016-05-23 15:45:00 IST
வேதாரண்யம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த ஓர் பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை பெற்றெடுத்த ராஜேஸ்வரி (30) என்பவரை கேசவன் திருமணம் செய்து கொண்டாராம்.

இந்நிலையில் கோடியக்காட்டு கோவில் திருவிழாவிற்கு குழந்தைகளுடன் ராஜேஸ்வரி சென்று விட்டாராம். நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பியவரை கேசவன் தட்டிக்கேட்ட போது பிரச்சனை ஏற்பட்டது. பின்பு ராஜேஸ்வரி அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனமுடைந்த கேசவன் வீட்டில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டாராம். கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் சிறப்பு சப்– இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News