செய்திகள்
தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டாலும் தஞ்சையில் தொடரும் வாகன சோதனை
தஞ்சையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலும் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தினரும் இங்கு தங்கி உள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந் தேதி நடைபெற்றது. ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இத்தொகுதியில் நாளை (23–ந் தேதி) தேர்தல் நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முறைகேடு நடைபெற்று இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து இருப்பதால் ஒரு வாரம் தேர்தலை தள்ளி வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் வேட்பாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை தகுதியிழக்க செய்ய வேண்டும் என்றும் அரவக்குறிச்சி பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன், தஞ்சை தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் ராமலிங்கம் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து ஜூன் 13–ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் தேர்தல் தேதியானது இறுதி அல்லது மாறுதலுக்கு உட்படலாம்.
இறுதி தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இருப்பினும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேட்பாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேட்பாளர்களின் தரப்பு கருத்துக்கள், ஆட்சேபனைகள், கோரிக்கைகளை வருகிற 27–ந் தேதிக்குள் கேட்டு தேர்தல் நடைபெறும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தஞ்சையில் தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 3 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவை 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 நிலைக்குழுவினர், ஒரு வீடியோ பிரசார குழுவினர் உள்ளனர்.
தொகுதி முழுவதும் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு, பகலாக சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சைக்கு 12 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்புக்கு வந்து இருந்தனர்.
அவர்களில் 7 படையினர் திரும்பி சென்றுவிட்டனர். மீதமுள்ள 5 துணை ராணுவ படையினர் 40 பேர் பறக்கும் படையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.