செய்திகள்

வேளாங்கண்ணியில் பெண்ணிடம் ரூ 6½ லட்சம் நகை அபேஸ் போலீசில் புகார்

Published On 2016-05-22 16:25 IST   |   Update On 2016-05-22 16:25:00 IST
வேளாங்கண்ணியில் பெண்ணிடம் ரூ 6½ லட்சம் மதிப்புள்ள நகைப்பையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இறைச்சக்குளம் தரேஸ்புரத்தை சேர்ந்தவர் பானு (வயது–42). இவர் தனது மகன்களுடன் நேற்று வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வந்துள்ளார்.

இவர் இரவு தங்கும் விடுதிக்கு செல்ல நடந்து சென்றபோது அவர் வைத்திருந்த கைப்பையை மர்மநபர் அபேஸ் செய்து விட்டான். அதில் 32½ பவுன் நகை இருந்தது. அதன் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.

இதுபற்றி அறிந்த பானு கதறி அழுதார். அவர்வேளாங்கண்ணியில் பல இடங்களில் தேடியும் அவரது கைப்பை கிடைக்க வில்லை.

இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீசிலில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து பானுவிடம் இருந்து நகைப்பையை அபேஸ் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் வேளாங்கண்ணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News