செய்திகள்
தமிழக அமைச்சரவையில் 13 பேர் புதுமுகங்கள்
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள அதிமுக.வின் அமைச்சரவை பட்டியல் நேற்று வெளியானது. இதில் 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 29 அமைச்சர்கள் இடம் பெற்றுள் ளார்கள். இதில் 13 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயக்குமார், ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு, பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.