செய்திகள்

சிங்கம்புணரியில் கோவில் திருவிழாவில் பெண்ணிடம் 20 பவுன் நகை கொள்ளை

Published On 2016-05-21 15:52 IST   |   Update On 2016-05-21 15:52:00 IST
கோவில் திருவிழாவின் போது பெண்ணிடம் 20 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி கீழகாட்டு பகுதியை சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி விஜயா (வயது60). இவர் சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி விஜயாவின் கழுத்தில் கிடந்த 20 பவுன் தாலி செயினை நைசாக அபேஸ் செய்து தப்பினார்.

விழா முடிந்து விஜயா வெளியே வந்து பார்த்த போது நகை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவரது கணவர் சற்குணம் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவனை தேடி வருகிறார்கள்.

Similar News