செய்திகள்

கர்நாடக மாநில பஸ்சில் வந்த சேலம் வியாபாரியிடம் வெள்ளி-கொலுசுகள் பறிமுதல்

Published On 2016-05-07 17:29 IST   |   Update On 2016-05-07 17:29:00 IST
கர்நாடக மாநில பஸ்சில் வந்த சேலம் வியாபாரியிடம் 13 கிலோ வெள்ளி-கொலுசுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசி பாளையத்தில் ஈரோடு – சத்தியமங்கலம் ரோட்டில் இன்று அதிகாலை 1 மணி அளவில் கோபி தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரிகள்உமாபதி. அங்கமுத்து ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மைசூரிலிருந்து மதுரை சென்ற கர்நாடக மாநில அரசு பஸ்சை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது சேலத்தை சேர்ந்த முகமது யாகூப் (வயது 44) என்பவர் கொண்டு வந்த ஒரு பையை சோதனை நடத்தினர்.

அந்த பையில் 13 கிலோ வெள்ளி கட்டிகள் 23 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் இருந்தது.

முகமது யாகூப் சேலத்தில் வெள்ளி வியாபாரம் நடத்தி வருகிறார். இவர் மைசூரிலிருந்து வெள்ளி வாங்கி வந்து அதை உருக்கி வெள்ளி பொருட்கள் செய்து விற்பனை செய்து வந்தார்.

அந்த வகையில் மைசூரிலிருந்து வெள்ளி வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் இதற்குரிய உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதை கோபி தேர்தல் நடத்தும் அலுவலரும் சப்–கலெக்டருமான கிருஷ்ணன் உன்னியிடம் ஒப்படைத்தார். அவர் கோபி கருவூலத்தில் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.

* * * கோபி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் உன்னியிடம் வெள்ளி மற்றும் பணம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News