பாமக.வுக்கு 70 சதவீத வாக்குகள் கிடைக்கும்: ராமதாஸ்
மயிலாடுதுறை:
பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸ் மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:–
பா.ம.க.வினால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நம்புகிறார்கள். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் பூரணமது விலக்கு வேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக வலியறுத்தி வரும் ஒரே கட்சி பா.ம.க. தான்.கட்சி தொடங்கபட்ட போது 2–வது தீர்மானமே பூரணமதுவிலக்கு தான்.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது 205 தொகுதியை வெல்வோம் என்றேன். ஆனால் இங்கு நடைபெறும் அறிமுக கூட்டத்தில் பார்க்கும் போது 208 தொகுதிகள் கட்டாயம் வெல்வோம் என தெரியவருகிறது.
தமிழகத்தில் 70 சதவீகீத வாக்குகள் பா.ம.க. விற்கு கிடைக்கும். நாளுக்கு நாள் பா.ம.க. வெற்றி பெறும் தொகுதிகள் அதிகரித்து வருகின்றது. புதியதாக ஒட்டு போடும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் தாய்மார்கள் மத்தியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தான் சொன்னதை செய்வார் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற மக்களின் மனதில் பதிந்துள்ளது.
கடந்த 2015 பிப்ரவரியில் செயற்குழு கூட்டம் நடைபெற்று முதலமைச்சர் வேட்பாளாராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யபட்டதில் இருந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விவசாயிகள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு வேலை செய்கின்றவர்கள், மகளிர் குழுகளை சந்தித்து அறிமுகபடுத்திகொண்டு மக்களின் தேவைகளை குறித்து மாற்றத்தை கொண்டு வருவதை விளக்கினார். அதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தாய்மார்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை பா.ம.க.தான் கொண்டு வரமுடியும் என நம்புகின்றனர்.