செய்திகள்
செந்துறை அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
செந்துறை அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி தலைவராக தேன்துளி உள்ளார். இங்கு தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்த பொதுமக்களிடம் ஊராட்சி மன்றத்தலைவர், நீங்கள் ஊதியத்திற்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்று புகார்கள் வருகிறது. ஊதியத்திற்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்றால் நானே பணியிடம் வந்து கண்காணிப்பேன் என்று கூறி சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவு மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்களை தரக்குறைவாகவும், சாதிபெயரை சொல்லி திட்டியதாகவும் கூறி அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள பொன்பரப்பியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆணையர்கள் சந்தானம், ஜெயகுமாரி, செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவு மக்கள், 100 நாள் பணியாளர்களிடம் ஊராட்சி மன்றத்தலைவர் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை. பணிகளை சரியாக செய்யவேண்டும் என்றுதான் கூறினார் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி கூறினர். இதையடுத்து சாலை மறியல் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.