செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் மீது தாக்குதல் வாலிபர் கைது

Published On 2016-05-02 19:51 IST   |   Update On 2016-05-02 19:51:00 IST
நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெய்வேலி:

பண்ருட்டியை அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமரன் (வயது52) என்.எல்.சி. ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் பாபு(25). இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

நேற்று விஜயகுமரன் மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது வழி மறித்து பாபு அவரது தந்தை காசி உறவினர் முரளி ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் விஜயகுமரனை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். முரளி காசி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Similar News