செய்திகள்

ஜாதி உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக வைகோ மீது 2 வழக்குகள் பதிவு

Published On 2016-05-01 18:46 IST   |   Update On 2016-05-01 18:46:00 IST
சாதி உணர்வை தூண்டும் விதமாகவும், தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்து பேசியதாக வைகோ மீது போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு. தி.க–மக்கள் நலக்கூட்டணி– த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

கடந்த 23–ந்தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அரியலூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து அரியலூர் வி.கைகாட்டியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் ஜாதி உணர்வை தூண்டும் விதமாகவும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது ஆதாரமில்லாமல் புகார் கூறி பேசினாராம். இது குறித்து அரியலூர் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி அமுதா விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

அதன்பேரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜதுரை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது பிரிவு 153 (சாதி உணர்வை தூண்டுதல்), பிரிவு 171 (தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்தல்) ஆகிய 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News