திருவண்ணாமலையில் இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்தவர் சிராஜ். இவரது மனைவி சிராதீன் (வயது 24). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிராதீனுக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 20–ந் தேதி சிராதீனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியை தாங்கி கொள்ள முடியாமல் சிராதீன் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
மயங்கி கிடந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிராதீன் இறந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.