செய்திகள்

கீரனூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற 125 விவசாயிகள் கைது

Published On 2016-04-06 12:10 IST   |   Update On 2016-04-06 12:13:00 IST
விவசாய கடன்களை ரத்துசெய்யக்கோரி கீரனூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீரனூர்:

தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியாக மத்திய அரசு தெரிவித்த நதிகள் இணைப்பு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நதிகள் இணைப்பு சங்க மாநில பொறுப்பாளர் ரவி தலைமையில், மாவட்ட செயலாளர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் சைவராஜ், மாவட்ட பொருளாளர் சார்லஸ், ஒன்றிய தலைவர் ஆறுமுகம் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் செல்லபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடராசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட 125 பேர் கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ரெயில் மறியல் செய்வதற்காக வந்தனர்.

தையடுத்து கீரனூர் ரெயில் நிலையத்திற்கு அருகே கீரனூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 125 பேரையும் கைது செய்தனர்.

விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்திற்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News