செய்திகள்

அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: புதுக்கோட்டை கலெக்டர்

Published On 2016-04-05 21:30 IST   |   Update On 2016-04-05 21:30:00 IST
அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை கலெக்டர் கணேஷ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 16.05.2016 அன்று நடை பெறுவதையொட்டி மாவட் டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில்ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி வட்டம், பட்டரைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தை துவக்கி வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதே போன்று கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாணவிகள் வாக்களித்ததையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் புதிய சாய்தள மேடை அமைக்கவும், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் சம்மந் தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தேர்தலின் போது அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணி மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாகனங்களை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் குறித்து தேர்தல் ஆணையத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News