உள்ளூர் செய்திகள்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் சிறப்பு மண்டல பூஜை

Published On 2022-12-20 15:00 IST   |   Update On 2022-12-20 15:00:00 IST
அய்யப்ப சுவாமி கோவிலில் 50-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால அய்யப்ப சுவாமி கோவிலில் 50-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது.

இன்று காலை கணபதி பூஜை உடன் தொடங்கிய இவ்விழாவில் சுவாமிக்கு பால்,பன்னீர், திராட்சை, சந்தனம், இளநீர், நெய் போன்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபம் காட்டப்பட்டது.

இதனை அடுத்து கணபதி ஹோமம் நடைபெற்ற நிலையில் அய்யப்ப பக்தர்களுக்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவரின் திருவீதி உலா நடைபெற்றது.

நகரத்தின் முக்கிய வீதிகளிலான ,பட்டாளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம் ,காவல் நிலையம், ஸ்தூபி மைதானம் தருமபுரி சாலை மற்றும் திரௌபதி அம்மன் கோவிலை அடைந்து திருவீதி உலா நிறைவு பெற்றது.

இதில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி அய்யப்ப பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

Tags:    

Similar News