உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட வாலிபர்களையும்,பறிமுதல் செய்யபட்ட நாட்டு துப்பாக்கியையும் படத்தில் காணலாம்.

வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்த 2 வாலிபர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Published On 2023-08-12 10:00 GMT   |   Update On 2023-08-12 10:00 GMT
  • வனத்துறையினர் கத்திரிப்பட்டி, கம்பாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • கள்ளநாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை அருகே தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனவர்கர் கணபதி, வடிவேல், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், மதன்குமார் மற்றும் வனத்துறையினர் கத்திரிப்பட்டி, கம்பாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன்கள் தருமன் (28), சரவணன் (20) இருவரும், கள்ளநாட்டு துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்யும் போது கையும், களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து அவர்களை தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு முன் ஆஜர்படுத்த்தியதில் தலா ரூ,2,00,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

மேலும் கள்ளநாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News