உள்ளூர் செய்திகள்
வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயம்
- கடந்த 7-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் காலை காணவில்லை
- 17 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் முத்துமணி இவரது மகள் சண்மதி (வயது22).
இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் காலை காணவில்லை.
இது குறித்து முத்துமணி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் தருமபுரி மாவட்டம், பழைய புதூர் அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.