உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளித்த மாணவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி சாவு

Published On 2023-11-13 13:23 IST   |   Update On 2023-11-13 13:23:00 IST
  • இருவரும் மலைப்பகுதியை சுற்றி பார்த்துவிட்டு பால்கடை என்ற மலைக்கிராமத்தின் அருகே இருந்த அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
  • அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கி க்கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புலியூர்நத்தம் கிரா மத்தைச் சேர்ந்த மணிக ண்டன் மகன் ஹரிபிரசாத் (வயது 13). இச்சிறுவன் அருகே உள்ள முத்துநாயக்க ன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

புலியூர்நத்தத்தைச் சேர்ந்த உறவினர் தமிழர சன்(வயது 23) இவர் ஒட்டன்சத்திரத்தில் தனியார் காய்கறி கடையில் பணியாற்றி வருகிறார்.

தீபாவளி பண்டிகையை யொட்டி விடுமுறை என்பதால் தமிழரசன் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றிப்பா ர்க்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். உடன் ஹரிபிரசாத்தும் வந்தான். இருவரும் மலைப்பகுதியை சுற்றி பார்த்துவிட்டு பால்கடை என்ற மலைக்கிராமத்தின் அருகே இருந்த அருவியில் குளித்து க்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீ ரில் மூழ்கி சேற்றில் சிக்கி க்கொண்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள் என்று கூறி அலறி சத்தம் போட்டனர்.

உடனே பக்கத்தில் இருந்த வர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்து பார்த்தபோது ஹரி பிரசாத், தமிழரசன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது.

இது குறித்து ஒட்டன்ச த்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி நாளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News