உள்ளூர் செய்திகள்

 நல்ல பாம்பு உயிருடன் மீட்பதை படத்தில் காணலாம்.

மங்கலம்பேட்ைட அருகே வீடுகளுக்குள் புகுந்த 2 நல்ல பாம்புகள் உயிருடன் மீட்பு

Published On 2023-06-16 13:08 IST   |   Update On 2023-06-16 13:08:00 IST
  • வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
  • நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த ரூபாநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது வீட்டில் பாம்பு நுழைந்ததால் வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வெங்கடாஜலபதி வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். இதே போல, மங்கலம்பேட்டை அடுத்துள்ள பழையபட்டினம் கிராமம், முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது சாலிஹ் என்பவர் வீட்டின் சமையல் அறையில் புகுந்த 6அடி நீள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News