உள்ளூர் செய்திகள்

ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க 15-ந் தேதி கடைசி நாள்

Published On 2022-12-09 09:26 GMT   |   Update On 2022-12-09 09:26 GMT
  • கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம்.
  • அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

சேலம்:

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம். எனவே அருகில் அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

மேலும் அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து போஸ்ட் மேன் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் ஆதாருடன் தொலைபேசி எண் இணைத்தல், திருத்தம் மற்றும் 5 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் ஆகிய 2 வகையான ஆதார் சேவைகளையும் வழங்கி வருகிறது என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News