உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டு பகுதியில் புதியய தார் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி -பிரகாஷ் எம்.எல்.ஏ.-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்
- புதிய தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
- பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் யசஷ்வினி மோகன், எம்.கே. வெங்கடேஷ் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.