உள்ளூர் செய்திகள்

ஒன்றன் பின் ஒன்று மோதி, விபத்துக்குள்ளாகி நிற்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி விபத்து: ராணுவ வீரர் பலி

Published On 2023-09-17 10:22 GMT   |   Update On 2023-09-17 10:22 GMT
  • ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது.
  • ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருரப்பள்ளி அருகே மேலுமலை தனியார் நர்சிங் கல்லூரி எதிரில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது. அப்போது முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென வலது பக்கத்தில் திரும்பி யதால் கட்டுப்பாட்டை இழந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் பின்னால் வந்த லாரியும் காரில் மோதியது.

இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையை சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டனர்.

அதேபகுதியில் விபத்து நடந்த, அடுத்த சில நிமிடத்தில் ஓசூர் - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 3 லாரி, 6 கார்கள் அடுத்த டுத்து ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் காயம டைந்தனர்.

விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார், இடிபாடுகளில் சிக்கிய வர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்து, வாகனங்களை அப்புறப்படுத்தினர்.தேசிய நெடுஞ்சாலையில் அடுத்த டுத்து வாகனங்கள் மோதிய விபத்தால் சுமார், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து சீரான நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News