உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

Published On 2023-03-21 15:40 IST   |   Update On 2023-03-21 15:40:00 IST
  • 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள, ஓட்டுநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
  • இதற்கான ஆட்கள் தேர்வு வருகிற 25-ந் தேதி சேலம் தமிழ்சங்கம் அண்ணா நூலக வளாகம் முதல் மாடியில் நடக்கிறது.

மேட்டூர்:

சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள, ஓட்டுநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு வருகிற 25-ந் தேதி சேலம் தமிழ்சங்கம் அண்ணா நூலக வளாகம் முதல் மாடியில் நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக பி.எஸ்.சி நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்.,டி.எம்.எல்.டி. அல்லது உயிர் அறிவியல் பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி, பிளாண்ட் பயாலஜி ஆகியவை படித்திருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மாத ஊதியமாக ரூ.15,435 வழங்கப்படும். முறையாக எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம்-உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, நேர்முகத்தேர்வில் பின்பற்றப்படும்.

இதேபோல், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இலகுரகவாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

முறையாக எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வ நடத்தப்படும். மாத ஊதியம் ரூ.15,235 வழங்கப்படும் என்று 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News