உள்ளூர் செய்திகள்

சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைக்கப்பட்டுள்ளது.

திருவெண்காடு, சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Published On 2022-12-13 09:05 GMT   |   Update On 2022-12-13 09:05 GMT
  • சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம்.
  • மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரணேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

இதனை அடுத்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மந்திரங்கள் முழங்கிட அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1008 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், உபயதாரர் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, கோவில் மேலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News