உள்ளூர் செய்திகள்

விநாயகருக்கு கொழுக்கட்டை படையிடப்பட்டிருந்த காட்சி.

தோரணமலை கோவிலில் 1008 கொழுக்கட்டை படையலுடன் விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2022-08-31 08:59 GMT   |   Update On 2022-08-31 08:59 GMT
  • தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகன் கோவிலில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த தலமாகும்.
  • இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலை அடிவாரத்திலுள்ள விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம்செய்யப்பட்டு 1,008 கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகன் கோவிலில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த தலமாகும்.

1,008 கொழுக்கட்டை படையல்

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலை அடிவாரத்திலுள்ள விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம்செய்யப்பட்டு 1,008 கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

சிவனடியார்களின் 6 மணிநேரம் தொடர் பஜனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

8, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. சோகோ மென்பொருள் கம்பெனியின் மென் பொறியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை கூறினர்.

தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூலகத்தில் மாணவ-மாணவியர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பக்தர்களுக்கு காலை முதல் நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News