உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-06-06 09:56 GMT   |   Update On 2023-06-06 09:56 GMT
  • கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பைகள் ஒழிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுக்காகவும் இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பைகள் ஒழிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளையும் பிரித்து, உரம் தயாரிப்பு, மக்கா குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் நடக்கிறது. குப்பை கிடங்கில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்காகவும், சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுக்காகவும் இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.

இதில் நகராட்சி பொறியாளர் சேகரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், மாதேஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர், மற்றும் தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News