உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
பெரும்பாறை மலைக்கிராம பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி
- பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம், 10-ம் வகுப்பில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொதுத்தேர்வில் 12ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்ப–ட்டது.
இதில் 12ம் வகுப்பு 100 சதவீதம் 10ம் வகுப்பு 96சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மலை க்கிராம பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
புதிய கல்வி ஆண்டில் இதே போல் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.