உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
- ஆவின் பால் ஏஜெண்ட் . நேற்று இவர் கடையில் வசூலான ரூ.15,100 பணத்தை எடுத்துக் கொண்டு தாதகாப்பட்டியில் பஸ் ஏறி, ஜவுளிக்கடை ஸ்டாப்பில் உள்ள தனியார் வங்கியில் செலுத்த வந்தார்.
- அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் விஜயா (வயது 50). ஆவின் பால் ஏஜெண்ட் . நேற்று இவர் கடையில் வசூலான ரூ.15,100 பணத்தை எடுத்துக் கொண்டு தாதகாப்பட்டியில் பஸ் ஏறி, ஜவுளிக்கடை ஸ்டாப்பில் உள்ள தனியார் வங்கியில் செலுத்த வந்தார். தொடர்ந்து வங்கியின் உள்ளே சென்று பணத்தை கணக்கில் கட்டி விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் நகை கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது கூட்ட நெரிசலில் யாரோ மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து விஜயா அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.