உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேக்கடியில் 10 செ.மீ மழை பதிவு : வேகமாக உயரும் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2023-10-14 05:42 GMT   |   Update On 2023-10-14 05:42 GMT
  • தொடர் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
  • பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று வரை 800 கனஅடிநீர் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு 1000 கனஅடியாக அதிகரி க்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம்136 அடிவரை உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

வைகை அணை யின்நீர்ம ட்டம் 53.18 அடியாக உள்ளது. அணைக்கு 884 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

மஞ்சளாறு அணையின்நீ ர்மட்டம் 54.75 அடியாக உள்ளது. 35 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.02 அடியாக உள்ளது. 28 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 7, தேக்கடி 101.4, கூடலூர் 1, உத்தம பாளையம் 3.8, சண்முகா நதிஅணை 2.4, வைகை அணை 3.6, மஞ்சளாறு அணை 18, சோத்துப்பாறை 2, ஆண்டிபட்டி 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News